உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் பைக்கில் சென்ற ஊழியர் வேன் மோதி பலி

நெல்லையில் பைக்கில் சென்ற ஊழியர் வேன் மோதி பலி

திருநெல்வேலி : நெல்லையில் மோட்டார்பைக்கில் சென்ற மருந்துக்கடை ஊழியர் வேன் மோதி இறந்தார். நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கணேசன் மகன் பால்மாரி(36). இவர் அப்பகுதி மருந்துக்கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு ஊரில் இருந்து மோட்டார்பைக்கில் புறப்பட்டு நெல்லை ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு ரயில்வே பாலம் அருகே பைக் வந்த போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மோதியது. பைக் நொறுங்கியது. வேனின் முன்பகுதி சேதமடைந்தது. அதே இடத்தில் பால்மாரி இறந்தார். வேனை ஓட்டி வந்த தென்காசி சொர்ணையாபுரத்தை சேர்ந்த சித்திக்(25), வேனில் இருந்த கோயம்புத்தூர் மதுக்கரை காந்திநகரை சேர்ந்த ராஜேஷ்(25) காயமடைந்தனர். இருவரும் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நெல்லையில் நாள் முழுவதும் வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள தெற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து நடந்ததால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாகனப்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலை விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ