உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடன்குளம் அணுமின் நிலையம் மூட வலியுறுத்தி : நெல்லையில் எஸ்.டி.பி.ஐ.கண்டன ஆர்ப்பாட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையம் மூட வலியுறுத்தி : நெல்லையில் எஸ்.டி.பி.ஐ.கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : கூடன்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட மத்திய அரசை வலியுறுத்தி நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நஸிர்கான் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சி.கார்த்திக், மதிமுக மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அண்டன் கோமாஸ், எஸ்.டி.பி.ஐ., மாநில பேச்சாளர் செய்யது இப்ராகிம் கண்டன உரையாற்றினர். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி