உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இரண்டு பெண்கள் புகாரால் நெல்லையில் புலியால் கிலி

இரண்டு பெண்கள் புகாரால் நெல்லையில் புலியால் கிலி

திருநெல்வேலி:திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனி பொதிகை நகர் அருகே புதர் மண்டிய இடத்தில் நேற்று பகலில் புலி ஒன்று உலவியதை, இரு வெவ்வேறு பெண்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஆய்வு செய்தனர். புலியின் காலடித்தடம் போல இருந்தது. வனத்துறை அதிகாரிகள், அங்கு புலி வந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.எனினும், இதே பகுதியில் உள்ள திருமால் நகர் அருகே, 2015 ஜனவரி 19ல் சிறுத்தை வந்தது. பின், அதை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர். எனவே, புலி வந்துள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் ஊர்ஜிதப்படுத்தாத நிலையில், வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை