உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டபையில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள வழுதிகைமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார், என்பவரிடம், உரிய ஆவணங்களின்றி 1 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை போலீசார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் ஒப்படைத்தனர். அதன்பின், பொன்னேரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை