உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரமங்கலத்தில் சுகாதார பாதிப்பு மருத்துவமனையில் 12 பேர்

வீரமங்கலத்தில் சுகாதார பாதிப்பு மருத்துவமனையில் 12 பேர்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது வீரமங்கலம், வீரமங்கலம் காலனி உள்ளிட்ட பகுதிகள். இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பகுதிவாசிகள் சிலருக்கு அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.நான்கு பேர், வேலுாரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் ஆர்.கே.பேட்டை அரசு சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆர்.கே.பேட்டை வட்டார மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், வீரமங்கலத்தில் முகாம் அமைத்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் துாவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி