உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் வித் அவுட் 1,300 பேர் சிக்கினர்

ரயிலில் வித் அவுட் 1,300 பேர் சிக்கினர்

சென்னை:சென்னை மின்சார ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,300 பேர் பிடிப்பட்டனர். இவர்களிடமிருந்து 3.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட 264 மின்சார ரயில்களில் ஆர்.பி.எப்., வீரர்களுடன் இணைந்து, 160 டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் டிக்கெட் இன்றி பயணம், சாதாரண டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் என, பல்வேறு வகைகளில் முறைகேடாக பயணம் செய்த 1,300 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தின் மின்சார ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் இன்றி இருப்பவர்களை கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த 15 நாட்களுக்கு சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ