| ADDED : ஆக 05, 2024 02:29 AM
பொதட்டூர்பேட்டை,:ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக, 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது.மேலும், அவர்களின் தனி திறன்களை ஆரம்ப நிலையிலேயே புரிந்து கொள்ள உதவுதல், நீண்ட காலத்திற்கு அவர்களின் தொழில் வாழ்க்கையின் அடித்தளமாகச் செயல்படும் வலுவான அடித்தளத் திறன்களை வளர்ப்பதற்கு அவர்களை தயார் செய்வது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தமிழக முதல்வரின் திறனறி தேர்வு நேற்று நடந்தது. பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில், 192 மாணவர்கள் பங்கேற்றனர். காலையில் கணிதம் தேர்வும், பிற்பகலில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வும் நடந்தன. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வி வரை மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.