| ADDED : ஜூன் 10, 2024 06:36 AM
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையில், உதவி ஆய்வாளர் மாரியப்பன், போலீஸ்காரர்கள் ரஞ்சித் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பைக்கில் மதுபோதையில் வந்த மூவரிடம் விசாரித்தனர். அவர்கள், கொடுங்கையூர், அன்னை சத்யா நகர், 2வது தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ், 23, ராஜ், 25, பிரசாந்த், 21, என்பது தெரியவந்தது.மதுபோதையில் பைக் ஓட்டி வந்ததால், பைக்கை ஒப்படைத்துவிட்டு காலையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மூவரையும் ஆர்.கே.நகர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, பிரசாந்தின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். புஷ்பராஜ், ராஜ் இருவரையும் கைது செய்தனர்.