உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு போராட்டக்காரர்கள் 25 பேர் கைது

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு போராட்டக்காரர்கள் 25 பேர் கைது

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரத்தில், 2000ம் ஆண்டில், ஒன்றியத்திற்கு உட்பட்ட 109 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.இதில், மூன்று நபர்கள் மட்டுமே அங்கு வீடு கட்டி குடியேறியுள்ளனர். இதர பயனாளிகள், குறிப்பிட்ட காலத்திற்குள், அங்கு வீடு கட்டி குடியேறவில்லை. இதனால், அரசு விதிமுறையின் படி, சம்பந்தப்பட்ட இடம் அரசுக்கு உரியதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான எச்சரிக்கை பதாகை அந்த பகுதியில் வைக்கப்பட்டது. சமீபத்தில் அங்கு, 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டியுள்ளனர்.ஆனால், 20 ஆண்டுகளாக அங்கு பயனாளிகள் குடியேறாததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா செல்லாததாகி விட்டது எனக்கூறி, வருவாய் துறையினர் நேற்று அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகளை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர்.இதனால், அதிர்ச்சியடைந்த பயனாளிகள் 25 பேர், அதே இடத்தில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஆர்.கே.பேட்டை போலீசார், அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

எதிரேதான் ஆக்கிரமிப்பு

எஸ்.வி.ஜி.புரம் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே, 200 மீட்டர் தொலைவில், ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியே மலைச்சரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. வீடுகள் கட்டி முடிக்கும் வரை, வருவாய்த் துறையினர் பார்வைக்கு வராததும் வியப்பாக உள்ளது. கட்டி முடிக்கும் வரை அமைதி காத்து, தற்போது இடித்து அகற்றியது, தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை