உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுதாரிக்காத அரசியல் கட்சிகளால் 25,000 ஓட்டுகள் மிஸ்ஸிங்

சுதாரிக்காத அரசியல் கட்சிகளால் 25,000 ஓட்டுகள் மிஸ்ஸிங்

திருவொற்றியூர்:வடசென்னை லோக்சபா தொகுதியில், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், 60.13 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த தொகுதியில் உள்ளடங்கிய திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், கடந்த முறை, மூன்று லட்சம் ஓட்டுகள் இருந்தன. இம்முறை, அந்த எண்ணிக்கை, 2.74 லட்சம் என்ற அளவில் குறைந்தது.வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு முன்பே வெளியான நிலையில், ஓட்டு எண்ணிக்கை குறைவு குறித்து, அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, விடுபட்டோரை சேர்க்கவும், எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.மேலும், பாகம் வாரியாக ஓட்டு விபரங்களை சேகரிக்கும் பாக முகவர்களும், அவற்றை கண்டுபிடித்து, தகுதியான வாக்காளர்களை சேர்க்கவில்லை. இதன் விளைவு, நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், திருவொற்றியூர் தொகுதி முழுதும், பல இடங்களில் வாக்காளர்கள், பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வெற்றியை தீர்மானிக்க ஒரு ஓட்டு கூட கைகொடுக்கும் என்பதை உணர்ந்தும், அரசியல் கட்சியினர் இம்முறை, இப்பகுதி ஓட்டுகள் குறித்து கவலைப்படவில்லை என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்