உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கஞ்சா கடத்தி செல்வதாக மாவட்ட எஸ்.பி.,சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி., உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்தனர்.அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனை நடத்திய போது, 3 வாலிபர்கள் தங்களது பைகளில் துணிகள் நடுவில், 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி தடப்பள்ளிகுடம் மண்டலம் சேர்ந்த சாய் அனுமன், 20, மணிகண்டன், 19, ஹரிஷ், 22 என தெரிந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை