உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆணி பலகையில் யோகாசனம் 50 மாணவர்கள் உலக சாதனை

ஆணி பலகையில் யோகாசனம் 50 மாணவர்கள் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில், யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில், எழும்பூர் தாசில்தார் நித்தியானந்தம், வாசன் கண் மருத்துவமனை நிர்வாகிகள் லிங்கேஷ், அருண்குமார், யோகா பயிற்சியாளர்கள் காளத்தீஸ்வரன், வித்யா, அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்வின்போது, யோகா மையத்தை சேர்ந்த, 50 மாணவ - மாணவியர், ஆணி பலகையில், தொடர்ந்து, 50 யோகாசனம் செய்தனர். இவர்களது சாதனை நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதற்கான சான்றை நோவா உலக சாதனை தீர்ப்பாளர் ராஜ்குமார் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் உலக சாதனை சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ