உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளஸ்1 தேர்வில் 85.54 சதவீத தேர்ச்சி

பிளஸ்1 தேர்வில் 85.54 சதவீத தேர்ச்சி

திருவள்ளூர்:பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவில், திருவள்ளூர் மாவட்டம் 85.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மார்ச், ஏப்., மாதம் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 244 பள்ளிகளைச் சேர்ந்த, 13,381 மாணவர்கள், 14,868 மாணவியர் என மொத்தம் 28,249 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், மாணவர்கள் 10,636, மாணவியர் 13,529 என மொத்தம், 24,165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.54. மாவட்டத்தில், 102 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 13,809 பேரில், 10,427 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.51. மாநில அளவில், பிளஸ் 1 தேர்வில், திருவள்ளூர் மாவட்டம், 37வது இடத்தை பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை