மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
6 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், முருகேசன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 33. இவர், திருநின்றவூர் காந்தி சிலை அருகே எஸ்.ஆர்.பி., ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஸ்டார் ரூமில் பதுக்கி வைத்திருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 98 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.lஆந்திராவில் கஞ்சா கடத்தி வந்து திருத்தணி பகுதியில், விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி போலீசார் நேற்று திருத்தணி மலைக்கோவிலுக்கு படிகள் செல்லும் வழியில் உள்ள திருக்குளம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைவான இடத்தில் ஒருவர் பதுக்கியிருந்தை பார்த்த போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம், ஒரு கிலோ, 150 கிராம் கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். பின் விசாரணையில், கஞ்சா வைத்திருந்தவர் திருக்குளம் பகுதியைச் சேர்ந்த, சரவணன், 33 என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago