உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் படியில் இருந்து விழுந்த பார்வையற்றவர் பலி

கோவில் படியில் இருந்து விழுந்த பார்வையற்றவர் பலி

அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 36, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த படியில் ஏறும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை