உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி மலை ஏறிய பக்தர் மயங்கி விழுந்து பலி

திருத்தணி மலை ஏறிய பக்தர் மயங்கி விழுந்து பலி

திருத்தணி:சென்னை செங்குன்றம் சிருணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 46. இவர், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவிற்கு, மனைவி ராதிகா, மகன்கள் எபியன், தமிழ்இனியன் மற்றும் உறவினர்கள் என 10 பேருடன் வந்தனர். அங்கிருந்து சன்னிதி தெரு, திருக்குளம் வழியாக மலைப்படிகளில் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் நடந்து சென்றனர். மலைப் படிகள் முடிந்து தேர்வீதிக்கு வந்த போது, முத்து திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள உதவி மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், முத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை