உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசையில் புதிய தகனமேடை

திருமழிசையில் புதிய தகனமேடை

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுத்தாங்கலில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தகன மேடை இல்லாததால் பகுதிவாசிகள் இறந்தவர்கள் உடலை அருகில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் புதைத்தும், எரித்தும் வந்தனர். இந்நிலையில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பல்லவா மற்றும் சுப்ரீம் பவர் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் இணைந்து 3.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தகன மேடை கட்டி கொIத்தனர்.பேரூராட்சி தலைவர் - பொறுப்பு மகாதேவன் முன்னிலையில் நடந்த தகன மேடையை பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் டி.பி.ரமேஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து தகனமேடை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பல்லவா நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி