உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் பயன்பாட்டிற்கு வராத புதிய வகுப்பறை கட்டடம்

அரசு பள்ளியில் பயன்பாட்டிற்கு வராத புதிய வகுப்பறை கட்டடம்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து கடம்பத்துர் ஒன்றிய நிர்வாகம் தனியார் நிறுவன பங்களிப்புடன் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி 2022ம் ஆண்டு நவ. 25ம் தேதி துவங்கியது.புதிய வகுப்பறை கட்டும் பணி ஆறு மாதத்தில் நிறைவடையும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் தெரிவித்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணி நிறைவடைந்தது. மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை