உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறவழிச்சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை

புறவழிச்சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னை--- -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து திருத்தணி--- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு, 47 கோடி ரூபாயில், புறவழிச்சாலை அமைத்து கடந்த மாதம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது புறவழிச்சாலையில், 24 மணி நேரம் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலையில் இருந்து புறவழிச்சாலைக்கு திரும்பும் பகுதியில் சிக்னல், வேகத்தடை மற்றும் போலீசார் இல்லாததால் தினமும் குறைந்த பட்சம் ஐந்து விபத்துக்களாவது நடந்து வருகிறது. இதற்கு காரணம், நெடுஞ்சாலைகளில் அதிகவேகமாக வாகனங்கள் வருவதால் புறவழிச்சாலைக்கு திரும்பும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, புறவழிச்சாலை திரும்பும் நெடுஞ்சாலை பகுதியில் வேகத்தடை அமைத்தும், சிக்னல் அமைத்தும், போலீசார் நியமிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒளிரும் விளக்கு அமைப்பு

l திருவள்ளூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிகத்து வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுஉயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் திருவள்ளூர் நகரில் சி.டி.எச். சாலையில் உள்ள மருத்துவக்கல்லுாரி சந்திப்பு, அக்ஷ்யா பவன் சந்திப்பு, ஜே.என்.சாலையில் பாரத ஸ்டேட் வங்கி நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம் உட்பட ஒன்பது இடங்களில் 'பிலிங்கர்ஸ்' என்னும் நவீன முறையில் இயங்கும் போக்குவரத்து தானியங்கி ஒளிரும் சமிக்ஞை விளக்குகள் எஸ்.ஆர்.எம்., டிராபிக் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒளிரும் சமிக்கைகளை திருவள்ளூர் டி.எஸ்.பி., அழகேசன் மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்கினால் விபத்துகளை குறைக்கலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை