உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை, 19. இவர் கல்லுாரி படிப்பு முடித்து வேலை தேடி வந்தார். நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர் சுனில், 18 என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்னை- - - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் பஜார் வீதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மாவூர் பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் திருமலை சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த திருமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். சுனிலுக்கு கால் முறிவு ஏற்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ