உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி குப்பை கொட்டும் இடமாக மாறிய அவலம் ரூ.5.50 கோடி வரிப்பணம் வீண்

கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி குப்பை கொட்டும் இடமாக மாறிய அவலம் ரூ.5.50 கோடி வரிப்பணம் வீண்

கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ரயில் நிலையம். இப்பகுதி வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 14.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள், கடந்த 2015ல் துவங்கி, ஆறு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து. கடந்த 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.இதையடுத்து, கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால் பகுதிவாசிகள் கடவுப்பாதையை கடந்து செல்ல கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் 300 அடி நீளம், 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இந்த பணிகள் ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே துறையினர் தெரிவித்தனர். ஆனால், தற்போது சுரங்கப்பாதை பணிகள் ஒன்றைரை ஆண்டுகளாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.மேலும், சுரங்கப்பாதை பணிகளுக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புகள் விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும், குப்பை கொட்டப்பட்டு எரிக்கும் இடமாகவும் மாறி வீணாகி வருகிறது.எனவே, ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடம்பத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை