உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தந்தையை கொன்று தலைமறைவான மகன் கைது

தந்தையை கொன்று தலைமறைவான மகன் கைது

பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவருக்கு மூன்று மகள்கள், வெங்கடேசன், 28, என்ற ஒரு மகன் உள்ளனர்.தந்தை ராஜேந்திரனுக்கு சொந்தமான வீடு, அதையொட்டியுள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டுள்ளார்.இதற்கு, மகள்களுக்கும் சேர்ந்து நான்கு பாகமாக பிரித்துக் கொடுப்பதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.கடந்த 10ம் தேதி இரவு, வீட்டின் வெளியே சாலையோரம் நின்றிருந்த தந்தை ராஜேந்திரன் மீது, மினி வேனை ஓட்டி சென்று வெங்கடேசன் மோதினார். இதில், ராஜேந்திரன் பலியானார். வெங்கடேசன் தலைமறைவானார். பாரிவாக்கத்தில் பதுங்கியிருந்த அவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி