உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் கொள்முதல் நிலையங்களில் அடாவடி வசூல்

நெல் கொள்முதல் நிலையங்களில் அடாவடி வசூல்

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவள்ளூர், திருவாலங்காடு, கடம்பத்துார், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, அம்பத்துார் ஆகிய எட்டு வட்டாரங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 34 இடங்கள், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் சார்பில் 4 இடங்கள் என, மொத்தம் 38 இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கடம்பத்துார் வட்டாரத்தில் பேரம்பாக்கம், கூவம், கொண்டஞ்சேரி, எறையாமங்கலம், விடையூர், திருப்பந்தியூர் ஆகிய ஊராட்சிகளில், கொள்முதல் பணி துவக்கி வைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படும் பணி நடந்து வருகிறது. இதில், திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்பந்தியூர் மற்றும் சுற்றியுள்ள திருமணிக்குப்பம், வாசினாம்பட்டு, புதுப்பட்டு உட்பட 15 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையங்களில் வழங்கி வருகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்படும் நெல்லுக்கு, மூட்டை ஒன்றுக்கு, 55 ரூபாய் வரை கட்டாய வசூல் நடந்து வருவது, விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளிடம் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தும், கட்டாய வசூல் நடந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ