| ADDED : மே 25, 2024 11:10 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-- 25-ம் கல்வியாண்டிற்க்கானபயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாகவோ விண்ணப்பத்தை ஜூன் 7க்குள் அளிக்க வேண்டும்.எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இலவச சைக்கிள், காலணி, பாட புத்தகம், வரைபட உபகரணம், சீருடை மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக 750 ரூபாய், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அல்லது gmail.comஎன்ற இமெயில் மற்றும் 94442 24363, 94869 39263 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.