சென்னை: எஸ்.ஆர்.எம்., வேளாண் மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், வேளாண் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாகத்தில், நான்கு நாட்கள் நடந்தன.இப்போட்டியில், மாநில அளவில் உள்ள எஸ்.ஆர்.எம்., - டான்பாஸ்கோ, குமரகுரு, ஆதிபராசக்தி, அண்ணாமலை பல்கலை, தி இந்தியன் உட்பட 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன.இதில், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கிரிக்கெட் உட்பட மொத்தம் 13 விளையாட்டுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் தலா, 11 அணிகள் பங்கேற்று அசத்தின.அனைத்து போட்டிகளின் முடிவில், எறிபந்து, கூடைப்பந்து, செஸ் ஆகிய போட்டிகளில் அச்ச்சிறுபாக்கம் எஸ்.ஆர்.எம்., அணியினர் வெற்றி பெற்று அசத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் விளையாட்டுத் துறை இயக்குனர் மோகனகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லுாரியின் முதல்வர் ஜவஹர்லால் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.