உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண்துறை அறிவுரை

நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண்துறை அறிவுரை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் குறித்து வேளாண் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கா.முருகன் மற்றும் கடம்பத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சி.வெங்கடேசன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம், புதுமாவிலங்கை ஆகிய பகுதிகளில் விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது நெற்பயிரில் இலை கருகள் நோய் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அறிகுறிகள் தென்படுவதை பார்த்தனர். பின் அதற்கான பாதுகாப்பு உத்திகளையும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.மேலும் வேளாண்மை கிடங்கில் நெல் மற்றும் பச்சைபயறு விதைகள்,உயிர் உரங்கள், ட்ரைக்கோடெர்மா விரிடி, ஜிப்சம், நுண்ணுாட்டக் கலவைகள், பண்ணைக் கருவிகள் தொகுப்பு ஆகியன போதிய அளவில் இருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுப்பொருட்களை மானிய விலையில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து கடம்பத்துார் ஒன்றியத்தில் தனியார் உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ