சென்னை:ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான கயிறு இழுக்கும் போட்டி, ஓ.எம்.ஆர்.,ரில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது. ஆண்களில், கோட்டயம் மகாத்மா காந்தி, கேரளா, ராஜஸ்தான் மாதேவ், ஜேப்பியார், அமிட், கோழிக்கோடு பல்கலை உட்பட 39 அணிகளும், பெண்களில் எஸ்.ஆர்.எம்., - வேல்ஸ் உட்பட 36 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம், முதல் நாள் போட்டியை, ஜேப்பியார் பல்கலையின் துனை வேந்தர் பாஸ்கரன், எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் ஜீசஸ் ராஜ்குமார், அமிட் பல்கலையின் ராம்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.நேற்று காலை நடந்த போட்டிகளின் முடிவில், ஆண்களில் மகாத்மா காந்தி, பெங்களூரு, கேரளா பல்கலை உட்பட எட்டு அணிகளும், பெண்களில் கோழிக்கோடு, கேரளா, மகாத்மா காந்தி பல்லை உட்பட எட்டு அணிகளும், காலிறுதிக்கு தகுதி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.