உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில நெடுஞ்சாலையில் சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி

மாநில நெடுஞ்சாலையில் சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கர்லம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், சோளிங்கர் சாலையில், அரசு நடுநிலை பள்ளி, மகளிர் சுயுஉதவிக் குழு கட்டடம், நுாலகம், ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.இதில், அரசு நடுநிலை பள்ளி வளாகத்திற்கு மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களை விட வயதில் குறைந்த குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை.நுழைவாயிலை ஒட்டி, நெடுங்சாலை அமைந்துள்ளதால், குழந்தைகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு கருதி, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் வாயிற் கதவு அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை