உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், கடந்த 25ம் தேதி போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பயணித்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மோகன், 67, என்பவரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், தலைமறைவாக இருந்த கேரள மாநிலம் வரிச்சூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 63, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜில்லா வினோத்குமார், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ