உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாவு அரைக்கும் மிஷினால் இடையூறு பி.டி.ஓ., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

மாவு அரைக்கும் மிஷினால் இடையூறு பி.டி.ஓ., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தொழுதாவூர் சாலையில் வசிப்பவர் ஏழுமலை, 38. இவர் வீடு அருகே அரிசி அரைக்கும் மாவுமில் இயங்கி வருகிறது. குடியிருப்பு அருகே உள்ள இந்த மாவுமில்லில் காலை 7:00 மணிக்கெல்லாம் அரவை துவங்குவதாகவும் இரவு 9:00 மணி வரை நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் காலை, மாலை வேளைகளில் படிக்க முடியாமல் சிரமப்படுவதுடன், வீட்டிற்குள் கடும் சத்தம் எழும்புவதால் உறக்க மின்றி தவிப்பதாகவும், குடியிருப்பு அருகே உள்ள மாவுமில்லை அகற்ற வேண்டும் என தொடர்ந்து ஏழுமலை திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.இதற்கு எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் மன விரக்தி அடைந்த ஏழுமலை நேற்று மதியம் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். அலுவலக வாயிலில் அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அலுவலர்கள் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை