மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
14 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
14 hour(s) ago
சென்னை:பூத் ஏஜன்டாக வேலை பார்த்ததற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, உத்தண்டியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம், 45. பா.ஜ., சென்னை, கிழக்கு மாவட்ட பொதுச் செயலர்.கடந்த 20ம் தேதி, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள பா.ஜ., மண்டல தலைவர் ஜெகநாதன் என்பவர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் முத்துமாணிக்கம் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த துரைப்பாக்கம் பா.ஜ., மண்டல துணை தலைவர் வாசு, 46, வட்ட தலைவர் வெங்கட், 36, வட்ட செயலர் ஜெயகுமார், 50, டிக்காராம், 45, அவரது மகன் விக்னேஷ், 21, மாரியம்மாள், 48 ஆகியோர் பூத் ஏஜன்டாக வேலை செய்ததற்கான பணத்தை தரவில்லை என, முத்துமாணிக்கத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் முத்துமாணிக்கத்தை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் படி, ஐந்து பிரிவுகளின் கீழ் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வாசு, வெங்கட், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள டிக்காராம், விக்னேஷ், மாரியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago