உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலப்பணிகள் மந்தம்: கவரைப்பேட்டையில் மறியல்

பாலப்பணிகள் மந்தம்: கவரைப்பேட்டையில் மறியல்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கவரைப்பேட்டை பஜார் பகுதி. இப்பகுதியில் கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பால பணிகள், இரு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டன.இந்நிலையில், முன்பு இருந்த சுரங்கப்பாதை வழியாக பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடந்து சென்றனர்.மேம்பால பணிக்காக சுரங்கப்பாதை மூடப்பட்டதால், பழைய மேம்பால இடிபாடுகளுக்கு மேல் அனைவரும் ஆபத்தாக கடந்து சென்று வருகின்றனர்.மேலும், மேம்பால பணிகளும் மந்தகதியில் நடந்து வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்து வருகிறது. இதனால், தினமும் மணிக்கணக்கில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நேற்று கவரைப்பேட்டை பகுதி வாசிகள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். 'தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி, சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தப்படும்.'மேலும், மேம்பால பணிகளை துரிதமாக மேற்கொண்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர்.அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை