உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டியில் உடைந்த சிக்னல் கம்பம்

கும்மிடிப்பூண்டியில் உடைந்த சிக்னல் கம்பம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், பிரித்வி நகர் அருகே உள்ளது தேர்வழி சாலை சந்திப்பு. எப்போதும் அதிக அளவிலான வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும்.மூன்று சாலை சந்திக்கும் அந்த இடத்தில், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அதனால், ஆறு மாதங்களுக்கு முன் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ஜி.என்.டி., சாலையின் இரு திசையிலும் சூரிய சக்தியில் ஒளிரும் சிவப்பு நிற எச்சரிக்கை சிக்னல் கம்பங்கள் வைக்கப்பட்டன. அதன் வாயிலாக வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து அந்த சந்திப்பு பகுதியை கவனத்துடன் கடந்து சென்றனர்.ஒரு மாதத்திற்கு முன் வாகனம் ஒன்று மோதியதில், அந்த சிக்னல் கம்பம் உடைந்தது. உடைந்த கம்பத்தை அருகில் உள்ள மரம் ஒன்றில் சாய்த்து வைக்கப்பட்டது.வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்ட அந்த சிக்னல் கம்பத்தை மீண்டும் பழையபடி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை