உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணியர் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

பயணியர் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குப்பட்டது மணவாளநகர். இங்குள்ள நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார்,காஞ்சிபுரம், வேலுார்உட்பட பல பகுதிகளுக்கு சென்று வந்தனர்.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை 57ல் மணவாளநகர் - மேல்நல்லாத்துார் வரை உள்ள இருவழிச் சாலை, 43 கோடி ரூபாய் மதிப்பில், நான்குவழி சாலையாக மாற்றும் பணி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கி நடந்து வந்தது. இதையடுத்துஇப்பகுதியில் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது.இந்நிலையில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும், இன்றுவரை நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள், சுட்டெரிக்கும்வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென மணவாளநகர் பகுதிவாசிகள் மற்றும்பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்