உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் கவிழ்ந்து இருவர் பலி

கார் கவிழ்ந்து இருவர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் புத்துார் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு, 58. இவரது நண்பர்கள், அம்பத்துாரைச் சேர்ந்த ரவி, 47, பாலமுருகன், 44, மதன்குமார், 42, ஆகியோர், நேற்று காலை, சென்னையில் இருந்து திருச்செந்துார் கோவிலுக்கு செல்ல, 'இன்னோவா' காரில் புறப்பட்டனர். நேற்று மதியம் கார், திருச்சி - மதுரை பைபாஸ் சாலையில், பாத்திமா நகர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நால்வரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தோர், அவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, வழியில், கணேஷ்பாபு மற்றும் ரவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும், பலத்த காயங்களுடன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ