உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இளைஞர்கள் மோதல் 24 பேர் மீது வழக்கு

இளைஞர்கள் மோதல் 24 பேர் மீது வழக்கு

திருத்தணி: திருத்தணி அடுத்த தாடூர் கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் தாடூர் பகுதியைச் சேர்ந்த சச்சின், வல்லரசு, சஞ்சய், தீனா, உதயா ஆகிய ஐவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று திருத்தணி டி..எஸ்.பி., அலுவலகத்தை ஒரு தரப்பை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மறியலில் ஈடுபட முயன்ற, 18 பெண்கள் உள்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ