உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, கச்சூர் ஊராட்சி ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து, தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து இருந்தனர்.இதனால், விவசாயிகள் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.புகாரின்படி, ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையிலான வருவாய்த் துறையினர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால்நாயுடு, 65, ஆர்.வெங்கடாத்திரி, 45, வி.வெங்கடாத்திரி, 40, ஆகியோர் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.இதுகுறித்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ