உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கள்ளக்காதல் விவகாரம் நண்பரை வெட்டியவர் சரண்

கள்ளக்காதல் விவகாரம் நண்பரை வெட்டியவர் சரண்

திருத்தணி:திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்தவர் அருண், 37. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 39, என்பவரும் நண்பர்கள். இந்நிலையில், பிரகாசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா, 35, என்பவருக்கும், மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண், கடந்த வாரம் சுதா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் வரவழைத்து, கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், அருண் மீது பிரகாஷ் கடும் கோபத்தில் இருந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு, பிரகாஷ் தன் நண்பர் அருணை அழைத்துக் கொண்டு, கன்னிக்கோவில் பகுதிக்கு சென்றார்.அப்போது, பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், அருணின் பின்பக்க தலையில் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்தவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரகாஷ் தான் வெட்டிய கத்தியுடன், திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை