உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் பள்ளிகள் திறப்பு ஆதார் விபரம் சேகரிப்பு

திருவள்ளூரில் பள்ளிகள் திறப்பு ஆதார் விபரம் சேகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்தில் மாணவர்களின் ஆதார் பதிவு நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில், கோடை விடுமுறைக்குப் பின் நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியர் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர். திருவள்ளூர் நகராட்சி ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னனுவியல் கழகம் சார்பாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆதார் பதிவு மையத்தை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல்; பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்குதல், நேரடி பயனாளர் பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆதார் மையங்கள் இன்று முதல் செயல்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர் ஆதார் பதிவினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் முதன் மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன்,உதவி கலெக்டர்- பயிற்சி, ஆயுஷ் குப்தா, தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை