உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்லுாரிகள் கூடைப்பந்து ஜேப்பியார் சாம்பியன்..

கல்லுாரிகள் கூடைப்பந்து ஜேப்பியார் சாம்பியன்..

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், பொறியியல் கல்லுாரிகள் இடையிலான கூடைப்பந்து சாம்பியன் போட்டி நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில், துவக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி, காலிறுதியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியை 65 - 46 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் வி.ஐ.டி., பல்கலை அணியை 72 - 42 என எளிதாக வென்றது.இறுதி போட்டியில், ஜேப்பியார் அணியை எதிர்த்து, உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி களமிறங்கியது. இரு அணி வீரர்களும் தங்கள் வாய்ப்புகளை புள்ளிகளாக மாற்றியதால், நீயா, நானா என, போட்டியின் கடைசி நொடி வரை பரபரப்பு நீடித்தது.ஆட்டத்தின் கடைசி 20 விநாடியில் எஸ்.ஆர்.எம்., வீரர்கள் செய்த சிறு தவறை சமயோஜிதமாக தங்களுக்கு சாதமாக மாற்றிய ஜேப்பியார் அணி வீரர்கள், லாவகமாக பந்தை வலைக்குள் நுழைத்து கூடுதல் புள்ளியைப் பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ