| ADDED : மே 10, 2024 12:59 AM
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கடந்த 2022 - 23ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.இதற்காக, தீர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் பாரிவேட்டை உற்சவக்கட்டளை பெரும்பாக்கம் கிராமத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக திருவள்ளூர் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டது. இக்கட்டடம், ஓராண்டிற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விடவும் மாவட்ட நிர்வாகம் தீர்மானித்து உள்ளது. தற்போது, கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டு, நிலம் அளவீடு பணி துவங்கியது.இதை தொடர்ந்து, கட்டுமான பணிகள் முடிந்ததும் உதவி ஆணையர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.