உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஊத்துக்கோட்டை:சமூக நலன். மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா நடந்தது.தொம்பரம்பேடு கிராமத்தில் நடந்த இவ்விழாவிற்கு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, 100 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், தாலி, புடவை, வளையல், பழ வகைகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.பின் அவர் பேசுகையில், 'தி.மு.க., அரசு மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்கு இலவச பேருந்து, மகளிர் மாதந்தோறும் 1,000 ரூபாய் என, எண்ணற்ற திட்டங்கள். அனைவரும் அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை