உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவியரிடம் ஈவ் டீசிங் மக்களுடன் முதல்வர் முகாமில் புகார்

பள்ளி மாணவியரிடம் ஈவ் டீசிங் மக்களுடன் முதல்வர் முகாமில் புகார்

பழவேற்காடு:பழவேற்காடில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று, தனியார் மண்டபத்தில் நடந்தது.இதில், பழவேற்காடு, தாங்கல்பெரும்புலம், கோட்டைகுப்பம், லைட்அவுஸ்குப்பம், பிரளயம்பாக்கம், அவுரிவாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராமவாசிகள் பட்டா, இலவச வீட்டுமனை உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர்.பழவேற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியரிடம் ஈவ்டீசிங் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள் புகார் மனு அளித்தார்.மனுவில் உள்ளதாவது:பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 11ம் மற்றும், 12ம் வகுப்பில், 100க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.காலையில் பள்ளிக்கு வரும் நேரத்திலும், மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங்களிலும், இளைஞர்கள் சிலர் மாணவியரிடம் ஈவ் டீசிங் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்குவது, மாணவியரை கிண்டல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை தட்டிகேட்பதற்கு அச்சமாக உள்ளது. மாணவியர், பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை