உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது

போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக, திருவள்ளூர் நகர போலீசாருக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.அங்கு, கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த இருவரை சந்தேகத்தின்படி விசாரித்ததில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா மவுலிவாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய், 22 மற்றும் சுபாஷ், 25, என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 670 டைடால் எனும் போதை மாத்திரைகளையும், ஐந்து ஊசிகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 18,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி