உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதி கைது

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதி கைது

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி தேன்மொழி, 46. இவருக்கும், தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், 46 என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி ஜே.சி.பி., இயந்திரத்துடன் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டார்.அப்போது ரமேஷ், அவரது மனைவி மகேஸ்வரி, 40, உறவினர்கள் சாந்தி, 50. மஞ்சுளா, 46 ஆகியோர் விவசாய நிலத்திற்கு சென்று, ஜே.சி.பி., இயந்திரம் வேலை செய்யக்கூடாது என தகராறு செய்தனர். இதனால், தேன்மொழி - ரமேஷ் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் உறவினர்கள் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், பலத்த காயமடைந்த தேன்மொழி திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ரமேஷ், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி