உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெக்களூர் ஏரிக்கரை தார்ச்சாலை சேதம்

தெக்களூர் ஏரிக்கரை தார்ச்சாலை சேதம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஏரிக்கரை மீது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.6 கி.மீ., துாரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக தெக்களூர், அகூர், பாபிரெட்டிப் பள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வீரகநல்லுார் பழைய காலனி வழியாக வீரகநல்லுார் ஊராட்சி பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தெக்களூர் ஏரிக்கரையின் அருகே நந்தியாறு செல்வதால் அந்த ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் செல்லும் லாரிகள் ஏரிக்கரை தார்ச்சாலை வழியாக செல்கிறது. இதுதவிர சவுடு மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளும் மேற்கண்ட தார்ச்சாலை வழியாக செல்வதால் தற்போது சாலை சேதமடைந்துள்ளன.ஏரிக்கரை தார்ச்சாலை முழுதும் மெகா பள்ளங்கள் ஏற்பட்டதால் மேற்கண்ட கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த தார்ச்சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், விவசாயிகள் பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை