உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் கோவிலில் துர்கா தரிசனம்

சோளிங்கர் கோவிலில் துர்கா தரிசனம்

சோளிங்கர்: சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று தரிசனம் செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி கோவில். யோக நரசிம்மருக்கு கிழக்கில், சின்னமலையில் யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, நாடு முழுதும் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். 1,305 படிகள் கொண்ட மலைக்கோவிலுக்கு, 'ரோப்கார்' வசதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வந்தார். ரோப்கார் வாயிலாக பயணித்த அவர், மூலவர் யோக நரசிம்மரை தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ