உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம் படம் சீனிவாசன்

நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம் படம் சீனிவாசன்

திருவள்ளூர்: பூண்டி- நம்பாக்கம் சாலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க ஜல்லி கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும், சாலை அமைக்காததால், கிராமவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியத்தில், 49 கிராம ஊராட்சிகள் உள்ளன. பிளேஸ்பாளையம், மேட்டுப்பாளையம், ராமஞ்சேரி உள்ளிட்ட, 23க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து, இரண்டு சாலைகள் வழியாக பேருந்துகளும், கிராவாசிகளின் கார், இருசக்கர வாகனங்களும் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பூண்டி நீர்தேக்க கிருஷ்ணா கால்வாயில் இருந்து நம்பாக்கம் சாலை, குண்டும் குழியுமாக இருந்ததால், கிராமவாசிகள் கடும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன், சாலை சீரமைக்க, ஜல்லி கற்கள் கொட்டினர். ஆனால், இதுவரை பணி துவக்கப்படாமல் உள்ளது. பூண்டியில் இருந்து ரங்காபுரம் வரை 3 கி.மீ., வரை சாலை சீரமைக்காததால், பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ