| ADDED : ஆக 17, 2024 07:47 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் சன்னிதி தெரு, நெடுஞ்சாலை, தெற்குமாடவீதி அம்பேத்கர் நகர் என கிராமம் முழுதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு சில மாதங்களாக பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதுடன், குறைந்தளவு மின்சாரத்தால் மின்னழுத்தம் ஏற்படுவதால் பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக இரவு முழுதும் குறைந்த மின்னழுத்தம் தொடர்வதால், மின்சாதன பொருட்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் சீரான மின்வினியோகத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி நேற்று பகுதிவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.