| ADDED : ஜூலை 08, 2024 05:55 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சியில் பராசக்தி நகர் பவானி நகர் பாஞ்சாலி நகர் தெற்கு மாட வீதி வடக்கு மாட வீதி சன்னிதி தெரு என ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கேழ்வரகு, பூ விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க கதிரடிக்கும் களம் இல்லாததால் காளியம்மன் கோவில் தெரு சாலைகளை விவசாயிகள் நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாலங்காடில் பாஞ்சாலி நகரில் நெற்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.